அரியலூர் மங்காயி பிள்ளையார் கோயில் தெருவில் என்.மார்ட் 4 அடுக்கு புதிய ஷோரூம் திறப்பு விழா

அரியலூர்: அரியலூர் மங்காயி பிள்ளையார் கோயில் தெருவில் ஏ.பி.என். ஜவுளி நிறுவனத்தின் சார்பில் என்.மார்ட் என்ற புதிய முற்றிலும் ஆண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேடு ஆடைகள், அழகு சாதனங்கள், கவரிங் நகைகள் கொண்ட 4 அடுக்கு புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது . விழாவிற்கு வந்த அனைவரையும் சுதாகர்,காமாட்சி, ஆனந்த், மகாலட்சுமி தம்பதியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். ஷோரூமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்க் துணை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தொழில்துறை அமைச்சர் கணேசன் ,சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல் .திருமாவளவன், எம் .எல். ஏக்கள் அரியலூர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் ராஜாராம் ,செஞ்சி சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ரோஹித், கிருஷ்ணா, தர்ஷினி ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.

The post அரியலூர் மங்காயி பிள்ளையார் கோயில் தெருவில் என்.மார்ட் 4 அடுக்கு புதிய ஷோரூம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: