வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடும் அவதிப்படவே நாட்றம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சூரியபிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், கிளினிக் நடத்திய திருப்பத்தூர் தில்லை நகரை சேர்ந்த கோபிநாத் (40) லேப் டெக்னீஷியன் முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வருவதும், அவர் தவறான ஊசி போட்டதில் சிறுவன் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.
The post வலிப்பு நோய்க்கு தவறான ஊசி 7ம் வகுப்பு மாணவன் சாவு: போலி டாக்டர் கைது appeared first on Dinakaran.
