வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம்

 

பெரம்பலூர்,ஜூலை4:வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி வகுப்புகள் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மா ணவர்களுக்கு நேற்று (3ம் தேதி) கல்லூரி வகுப்புகள் துவங்கியது. இதனையொட்டி கல்லூரியின் கூட்ட மன்றத்தில் நடந்த முதலாமாண்டு மா ணவ மாதவியருக்கான வரவேற்பு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி தலைமையேற்று பேசும்போது, உயர் கல்வியின் அவசியம் குறித்தும் வாழ்க்கையில் உயர மாணவர்கள் செய்ய வேண்டுவது குறித்து விளக்கமாக கூறினார்.

மேலும் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும், நூலகம், உடற்கல்வித்துறை, நாடுநலப்பணித்திட்டம்,செஞ்சிலுவைச் சங்கம்,செஞ்சுருள் சங்கம், நான் முதலவன், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றின் பொறுப்பாளர்களும் துறையின் செயல்பாடுகள் பற்றியும் சேவை சங்கங்களில் ஏன் சேரவேண்டும் என்பது குறித்தும் பேசினர். விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

The post வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: