பொது தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு விழா

காரைக்குடி, ஜூலை 2: காரைக்குடி அருகே இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி மற்றும் நீட்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முன்னாள் மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. சாக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் சரண்யா செந்தில்நாதன், ஊராட்சி தலைவர் வைரமுத்து அன்பரசு, துணைத்தலைவர் திருநெல்லை ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் பரமதயாளன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், முன்னாள் தலைமையாசிரியர்கள் நாகராஜன், சொக்கலிங்கம், கணபதி, யோவான், ராஜதுரை, கருப்பையா, ஆரோக்கியம் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீட்தேர்வில் மாவட்ட 7, 8ம் இடம் பெற்ற முன்னாள் மாணவிகள் மீனாட்சி, அபிராமி ஆகியோரை பாராட்டு பரிசு வழங்கப்பட்டது.

The post பொது தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: