இறுதிபோட்டிக்கு செல்ல முயற்சிப்போம்: ஆட்டநாயகன் அப்ரிடி பேட்டி

நேற்றைய போட்டியின்போது ரோகித்சர்மா, கே.எல்.ராகுல். விராட்கோஹ்லி விக்கெட்டை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற ஷாகின் ஷா அப்ரிடி அளித்த பேட்டி: இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறை, நான் பெருமைப்படுகிறேன். நான் ஆரம்ப விக்கெட்டுகளைப் பெற்றால் அது எங்களுக்கு நல்லது என்று எனக்குத் தெரியும். இதற்காக நேற்று நான் பந்தை ஸ்விங் செய்ய கடுமையாக பயிற்சி செய்தேன். ஸ்விங் இருந்தால் மட்டுமே விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியும். ஸ்விங் செய்ய முயற்சித்து ரன்களை வழங்கினாலும் தொடர்ந்து ஸ்விங் செய்ய வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் இருந்தது. பாபர் அசாம், ரிஸ்வான் புதிய பந்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அனைத்து அணிகளும் கடினமாக உள்ளன. இதே வேகத்துடன் முன்னோக்கி சென்று இறுதிப் போட்டிக்கு வர முயற்சிப்போம், என்றார்….

The post இறுதிபோட்டிக்கு செல்ல முயற்சிப்போம்: ஆட்டநாயகன் அப்ரிடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: