மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது: அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பேட்டி

திஸ்பூர்: மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை ஓயவில்லை. இந்த மோதலில் பொதுமக்களில் 130 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 50 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை குவித்தும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று 4 நாள் தங்கி சமரச முயற்சி மேற்கொண்டும், மணிப்பூர் இன்றும் பற்றி எரிகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக விதிக்கப்பட்ட இணையதள சேவைக்கான தடை ஜூலை 05ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா; மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது. மணிப்பூரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அமைதியை மீட்டெடுத்து வருகின்றன. மணிப்பூரில் நாளுக்கு நாள் நிலைமை மேம்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன். அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும் என்று நான் கருதுகிறேன்.

கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்படும் போது காங்கிரஸ் அழவில்லை, அப்போது ​​அவர்கள் மணிப்பூருக்குச் செல்லவில்லை, அது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இப்போது, ​​மணிப்பூர் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது, இப்போது அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட மணிப்பூர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலைமை வேகமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது இவ்வாறு கூறினார்.

The post மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது: அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: