ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன் வென்று அசத்தல்..!!

ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரட்டையர் பிரிவுக்கும், ஒன்றையர் பிரிவுக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்குவாஷ் சர்வதேச கூட்டமைப்பு சார்பாக முதல்முறையாக கலப்பு இரட்டையர் பிரிவுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, சீனாவில் உள்ள ஹுவாங்சோவில் நடைபெற்றது.

குறிப்பாக இந்த தொடரில் 4 வீரர்கள் 2 இணைகளாக இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தனர். அதன்படி, தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் ஓர் அணியாகவும், அனாஹத் சிங், அபரி சிங் ஓர் இணையாகவும் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தனர். இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதியது. இதில் அனாஹத் சிங் இணை நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றனர். இந்நிலையில் இந்த தொடரின் 2வது அணியாக உள்ள பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

தரநிலையில் 2ம் இடத்தில் உள்ள மலேசிய இணையை வீழ்த்தி தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் ரேச்சல் அர்னால்ட்- இவான் யூயன் இணையை 11- 10, 11- 8 என்ற கணக்கில் வீழ்த்தி தீபிகா இணை சாம்பியன் பட்டம் வென்றது. ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம்வென்ற தீபிகா பல்லிகல் – ஹரிந்தர்பால் சிங் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன் வென்று அசத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: