டியோ டியோ டோலு!

வைரலோ வைரல்

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த சிறுவன் எம்.பி.தஸ்வந்த். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் படிக்கும் ஆல்பா இன்டர்நேஷனல் கேம்பிரிட்ஜ் பள்ளியில் புத்தாண்டு விழா நடந்திருக்கிறது. இதில் தன் நண்பர்களுடன் இணைந்து ‘அவன் இவன்’ படத்தில் விஷால் பெண் வேடமிட்டு நடனம் ஆடும் ‘டியா டியா டோலு…’ பாடலுக்கு இவரும் இவர் நண்பர்களும் அதே பாணியில் பெண் போல் வேடமிட்டு அதே நடன அசைவுகளுடன் ஆடியிருக்கிறார்கள்.திடீரென இந்த வீடியோ எங்கும் பரவத் துவங்க பலரும் இந்தச் சிறுவனை சிறுமி என்றே நினைத்து பார்க்க, கடைசியில் சிறுவன் என தெரிந்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்ததுடன் மேலும் அச்சிறுவனின் சிரித்த முகமும், நடனத் திறமையும் கண்டு பாராட்டி வருகிறார்கள். முறைப்படி நடனம் கற்றுக்கொள்ளும் தஸ்வந்த் எப்போதுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய நடன வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். மேலும் இவரின் அப்பாவும் நல்ல டான்சராம்.

அனைவரும் சமம்!

“உலகத்துல அனைவரும் சமம், நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும். அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க. யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னுதான்(பட்டப்பெயர்) கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான். ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி?” இப்படிக் கூறி முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வரை பிரபலமாகி பாராட்டுப் பெற்றுள்ளார் சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த அப்துல்கலாம் என்னும் சிறுவன். சமீபத்திய தனியார் தொலைக்காட்சிக்கு சாலையோர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிறுவன் அப்துல்கலாமின் இந்த பதில்கள்தான் இப்போது இணையத்தில் வைரல்.

The post டியோ டியோ டோலு! appeared first on Dinakaran.

Related Stories: