சுமார் 1.25 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதனிடையே உலக கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்கு செல்வது குறித்து பாகிஸ்தான் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை. அந்நாட்டு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சதாப் கான் அளித்துள்ள பேட்டி: இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான மகிழ்ச்சியைத் தருகிறது. ஒட்டுமொத்த அழுத்தமும் வேறுபட்டது. இப்போது நாங்கள் அங்கு செல்லும்போது, அது அவர்களின் சொந்த மைதானமாக இருக்கும். கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.
இருப்பினும், நாங்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அங்கு செல்கிறோம், எனவே இந்தியாவைப் பற்றி மட்டுமல்ல, கோப்பையை வெல்வது பற்றி சிந்திக்க வேண்டும், ஏனென்றால் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று உலகக் கோப்பையை இழந்தால், அதனால் எந்தப் பலனும் இல்லை. நாங்கள் இந்தியாவிடம் தோற்றாலும், உலகக் கோப்பையை வென்றால், அது தான் வெற்றி, ஏனெனில் அதுவே எங்கள் முக்கிய நோக்கம், என்றார்.
The post இந்தியாவை வெல்வது இலக்கல்ல; உலக கோப்பையை வெல்வதே வெற்றி.! பாக். ஆல்ரவுண்டர் சதாப் கான் பேட்டி appeared first on Dinakaran.