39 ஆண்டுக்கு பின் 10க்கு 10 சாதனை: புயலாய் மாறிய அன்சுல் மழையாய் பொழிந்த விக்கெட்; அரியானா வீரர் அபாரம்

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை வரலாற்றில், கடந்த 39 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அரியானா வீரர் அன்சுல் கம்போஜ் (23) நிகழ்த்தி உள்ளார். அரியானாவின் லாவ்லி நகரில் சவுத்ரி பன்சிலால் கிரிக்கெட் மைதானத்தில் அரியானா – கேரளா அணிகள் இடையிலான ரஞ்சி போட்டி நடக்கிறது.

நேற்றைய போட்டியின்போது, அரியானா அணியின் வேகப் பந்து வீச்சாளர் அன்சுல் கம்போஜ் புயலாய் மாறி வீசிய மந்திரப் பந்து வீச்சில் கேரள அணி வீரர்கள் நிலை குலைந்தனர். வெறும் 49 ரன்களே கொடுத்த அன்சுல் 10 விக்கெட்டுகளையும் மொத்தமாக அள்ளினார். அன்சுலின் ஆர்ப்பரிக்கும் பந்து வீச்சில் சிக்கிய கேரள அணி, 291 ரன்னில் கட்டுக்குள் வந்தது.

இதன் மூலம், 39 ஆண்டுக்கு பின், ரஞ்சியில் 10 விக்கெட்டுகளையும் மொத்தமாக அள்ளிய வீரர் என்ற அரிய சாதனையை அன்சுல் படைத்துள்ளார். இந்த சாதனையை படைக்கும் மூன்றாவது வீரர் இவர். இதற்கு முன், மேற்கு வங்க வீரர் பிரேமாங்சு சாட்டர்ஜி, ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் ஆகியோர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.

The post 39 ஆண்டுக்கு பின் 10க்கு 10 சாதனை: புயலாய் மாறிய அன்சுல் மழையாய் பொழிந்த விக்கெட்; அரியானா வீரர் அபாரம் appeared first on Dinakaran.

Related Stories: