எனவே ஆஸி 7ஓவர் முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 93ரன் குவித்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 7பந்தில் 21ரன், கேப்டன் இங்லீஸ் பந்து எதையும் சந்திக்காமல் களத்தில் இருந்தனர். பாக் வீரர்களில் அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட் எடுத்தார். நசீம், ரவுப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து 94ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக் விளையாடியது. ஆனால் ஆஸி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் ஃபர்ஹன் 8, கேப்டன் ரிஸ்வான் 0, பாபர் 3, உஸ்மான் 4, இர்பான் 0 என 3ஓவரில் 5விக்கெட்களை பறிகொடுத்தனர்.
அடுத்து சல்மான் 4, ஹசீபுல்லா 12, ஷாகீன்ஷா 11, நசீம் 0 என 7 ஓவரில் 9 விக்கெட்களை பறிகொடுத்த பாக் 64ரன் மட்டுமே எடுத்தது. அதனால் ஆஸி 29ரன் வித்தியாசத்தில் வென்றது. அப்பாஸ் 20ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றார். ஆஸி தரப்பில் அசத்திய நாதன் எல்லிஸ், சேவியர் தலா 3, ஸம்பா 2, ஸ்பென்சர் ஒரு விக்கெட் சாய்த்தனர். இந்த 2 அணிகளுக்கு இடையிலான அடுத்த 2வது டி20 ஆட்டம் நாளை சிட்னியில் நடக்கிறது.
The post 7 ஓவர் கிரிக்கெட் ஆஸியிடம் பம்மியது பாக். appeared first on Dinakaran.