சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் நன்றி

சென்னை: எங்கள் கவலைகளுக்கு செவிமடுத்து சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு: கடந்த ஆண்டு நான் எழுதியிருந்த கடிதத்தில் கோரியபடி, எங்கள் கவலைகளுக்குச் செவிமடுத்து, பாக்கெட் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி. இது தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கை ஆகும்.இவ்வாறு டிவிட்டரில் கூறியுள்ளார்.

The post சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: