உ.பி. முதல்வர் யோகி பதவி விலக வேண்டும்: துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய சந்திரசேகர் ஆசாத் வலியுறுத்தல்

சஹாரன்பூர்: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என ‘பீம் ஆர்மி‘ தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டம் தியோபந்த் பகுதியில் உள்ள பீம் ஆர்மி அமைப்பின் தொண்டர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சந்திரசேகர ஆசாத் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் ஆசாத் மீது துப்பாக்கியால் சுட்டதில், ஆசாத்தின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசாத் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், சந்திரசேகர் ஆசாத் தன் ட்விட்டர் பதிவில், “மாநில மக்களின் பாதுகாப்பு அரசின் பொறுப்பு. என் மீதான கொலைவெறி தாக்குதல் மாநில அரசின் தோல்வி. யோகி அரசு சாதி, மத அடிப்படையில் குற்றவாளிகளுக்கு புகலிடம் தருகிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post உ.பி. முதல்வர் யோகி பதவி விலக வேண்டும்: துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய சந்திரசேகர் ஆசாத் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: