மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தம்: திடீர் தடையால் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்தனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் கலவரம் வெடித்த வண்ணம் உள்ளது. அங்கு இன்னும் அமைதி திரும்பவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று மணிப்பூர் வந்தார். இந்நிலையில் மணிப்பூர் வன்முறையில் பாதித்து முகாமில் உள்ள மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பிஷ்னுபூர் பகுதியில் அவர் சென்ற கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தியதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

The post மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தம்: திடீர் தடையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: