லார்ட்ஸ் மைதானத்தில் ஊடுருவல்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இந்த போட்டியின்போது ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ அமைப்பை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மைதானத்துக்குள் ஊடுருவி இளஞ்சிவப்பு வண்ணப் பொடியை தூவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ வெளியே தூக்கிச் செல்ல, மற்றொருவரை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தடுத்து நிறுத்தினார். அதன் பிறகே போலீசார் உள்ளே ஒடி வந்து ஆர்பாட்டக்காரர்களை மடக்கிப் பிடித்து வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 46 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்திருந்தது. வார்னர் 66 ரன், கவாஜா 17 ரன் எடுத்து ஜோஷ் டங் வேகத்தில் ஆட்டமிழந்தனர். லாபுஷேன் – ஸ்மித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தது.

The post லார்ட்ஸ் மைதானத்தில் ஊடுருவல் appeared first on Dinakaran.

Related Stories: