பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அவலூர்பேட்டை வார சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்நிலையில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு இன்று நடந்த வார சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதுபோல் மேல்மலையனூர், அவலூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவைகளை போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

இதனால் வாரச்சந்தை களைக்கட்டியது. அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையானது. இதில் ரூ.6 கோடி வரை விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள், வியாபாரிகள் கூறினர். ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் இங்கு இன்று மாடுகளும் அதிகளவிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு மாட்டின் விலை ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அவலூர்பேட்டை வார சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: