சிவகிரியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சிவகிரி, ஜூன் 27: சிவகிரியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகிரி பகுதியில் ராஜசிங்கேப்பேரி, முத்தூர், கோனார் பகுதியில் உள்ள சுமார் 800 ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை பணி நடப்பதால் அரசு சார்பில் கொள்முதல் செய்ய சிவகிரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன் தலைமை வகித்து நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திமுக மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி, திமுக மாவட்ட துணை செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். முதுநிலை மண்டல மேலாளர் ராஜேஷ் வரவேற்றார். மாநில கரும்பு விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பழனிச்சாமி, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ரத்தினவேலு, திமுக மாவட்ட மாணவரணி சுந்தர் வடிவேலு, பகுதி நிலை அலுவலர் மலையாண்டி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். சிவகிரியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post சிவகிரியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: