தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் எந்த சிலையும் திருடு போகவில்லை: ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை விளக்கம்

மதுரை: தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் எந்த சிலையும் திருடு போகவில்லை என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் ராகு, கேது சிலைகள் திருடப்பட்டதாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. சிலைகளை கண்டறிந்து அதன் பழைய இடத்தில் வைத்து சிலை திருட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் எந்த சிலையும் திருட்டு போகவில்லை என்று அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிலைகளை இடம் மாற்றி வைத்த கோயில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை விளக்கம் அளித்தது. அறநிலையத்துறை அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

The post தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் எந்த சிலையும் திருடு போகவில்லை: ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: