அசாமில் அம்புபாச்சி மேளாவின் நிவிர்த்தி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு: நிறைவு நாளான இன்று நிவிர்த்தி பூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம்

அசாம்: வடகிழக்கு மாநிலமான அசாமில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து கோவிலான காமாக்கி கோயிலில் புகழ் பெற்ற அம்புபாச்சி மேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அசாமின் கௌகாத்தியில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள காமாக்கியா கோயிலில் காமாக்கியா என்ற பெண் தெய்வத்தை வழிபட நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இங்கு வருடாந்தர விழாவான அம்புபாச்சி மேளா கடந்த 22ம் தேதி காலை தொடங்கியது. அம்புபாச்சி மேளா என்பது மழை காலங்களில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். அம்புபாச்சி என்றால் தண்ணீருடன் பேசுவது என்று பொருள்படும். கடந்த 22ம் தேதி நள்ளிரவு முதல் இந்த கோவிலில் அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டு இன்று காலை மீண்டும் பூஜைகள் தொடங்கின. இந்த பூஜைக்கு வந்திருந்த பக்தர்கள் உடுக்கை அடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

காமாக்கியா தேவி தவிர்க்க முடியாத சுழற்சி விடுப்பால் கோவிலை விட்டு 4 நாட்கள் வெளியில் இருப்பாள் என்றும் அந்த 4 நாட்களில் கோவில் நடை சாத்தப்பட வேண்டும் என்பதும் ஐதீகமாகும். கோயில் கதவு திறக்கப்படும் நாளில் பிரமாண்டமான திருவிழா நடைபெறும். நிவர்த்தி என்று அழைக்கப்படும் இந்த பூஜை முடிந்த பிறகே பக்தர்கள் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இன்று காலை கோயில் திறக்கபட்டு நிவர்த்தி பூஜை நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post அசாமில் அம்புபாச்சி மேளாவின் நிவிர்த்தி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு: நிறைவு நாளான இன்று நிவிர்த்தி பூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: