ஜனசேனா கட்சிக்கு கண்ணாடி டம்ளர் சின்னம் தொடரும்:ஆந்திரா தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருமலை: ஆந்திரா மாநில தேர்தல் ஆணையம் ஜன சேனா கட்சி கண்ணாடி டம்ளர் சின்னத்தை தொடர உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் ஜனசேனா கட்சிக்கு கண்ணாடி டம்ளர் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும். சின்னங்கள் ஒதுக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் ஜன சேனாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜன சேனா கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி ஜனசேனா கட்சியின் தேர்தல் சின்னம் கண்ணாடி டம்ளர் தான். வரும் தேர்தலில் கண்ணாடி டம்ளர் சின்னத்திற்கு வாக்களிப்போம் – ஜன சேனா அரசை கொண்டு வருவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், தெலுங்கு தேசம், ஒய்சிபி, சிபிஐ, என்சிபி ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாகவும், ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாகவும் பட்டியலிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆந்திர தேர்தல் ஆணைய செயலாளர் கே.ஆர்.பி.எச்.என் சக்ரவர்த்தி பிறப்பித்துள்ளார். மேலும் பிஆர்எஸ் கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

The post ஜனசேனா கட்சிக்கு கண்ணாடி டம்ளர் சின்னம் தொடரும்:ஆந்திரா தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: