துறையூர் அருகே கரட்டாம்பட்டியில் குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை லால்குடி, அரியமங்கலத்தில் இன்று நடக்கிறது பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

லால்குடி: லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழக அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் லால்குடி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. முகாமில், ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, மார்பக புற்றுநோய் கண்டறிதல், காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை புற்று நோய் பரிசோதனை, பொதுமருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் கண்,காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமுக்கு வரும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வருவதுடன் முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். திருவெறும்பூர்: இதேபோல் தமிழக அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரியில் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறம் இந்த முகாமில் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. முகாமுக்கு வரும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வருவது உடன் முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

The post துறையூர் அருகே கரட்டாம்பட்டியில் குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை லால்குடி, அரியமங்கலத்தில் இன்று நடக்கிறது பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: