தஞ்சையில் கோடை விழா கோலாகலம்: 15 மாநில கலைஞர்கள் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் பண்பாடு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டிற்கான விழா நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது. விழாவை கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். விழாவின் தொடக்க நிகழ்வாக, பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர். பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரைப்பட பாடகி சின்னபொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மராட்டியம், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர். 2வது நாளாக இன்று மாலை கோடை விழா நடக்கிறது. இந்த கலை விழா வரும் 25ம் தேதி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

The post தஞ்சையில் கோடை விழா கோலாகலம்: 15 மாநில கலைஞர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: