பா.ஜ கூட்டணியில் பீகார் கட்சி

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி பா.ஜ கூட்டணியில் இணைந்தது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி கடந்த திங்களன்று(ஜூன் 19) அறிவித்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஜித்தன் ராம் மஞ்சி நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் கூறும்போது,’ இன்று முதல் நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டேன். பா.ஜவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

The post பா.ஜ கூட்டணியில் பீகார் கட்சி appeared first on Dinakaran.

Related Stories: