தைபே ஓபன் பேட்மின்டன் 2வது சுற்றில் பிரணாய்

தைபே: தைவானில் நடைபெறும் தைபே ஓபன்-2023 பேட்மின்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் தகுதி பெற்றார். முதல் சுற்றில் தைபே வீரர் ஷசைன் லின் யூவுடன் மோதிய பிரணாய் 21-11, 21-10 என நேர் செட்களில் வென்றார், இப்போட்டி 26 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வதேச களத்தில் இறங்கிய இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் 21-15, 21-16 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் சாமுவேல் ஹ்சியாவை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இப்போட்டி
43 நிமிடங்களுக்கு நீடித்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்யா ஹேமநாதன் 31 நிமிடங்களில் 21-7, 21-7 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் ஆக்னெஸ் கோரோசியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர் – சிக்கி ரெட்டி இணை 32 நிமிடங்களில் 21-14, 21-17 என நேர் செட்களில் சக வீராங்கனைகள் நவனீத் போக்கா – பிரியா கொன்ஜென்பம் ஜோடியை வென்று 2வது சுற்றில் விளையாட உள்ளது.இந்தியாவின் சங்கர் முத்துசாமி, சதீஷ்குமார் கருணாகரன், மெய்ரபா லுவாங், கிரண் ஜார்ஜ், ருத்விகா ஷிவானி, ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

The post தைபே ஓபன் பேட்மின்டன் 2வது சுற்றில் பிரணாய் appeared first on Dinakaran.

Related Stories: