பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவில் வாழ விரும்புகின்றனர்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

அம்பேத்கர் நகர்(உபி): உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.1,212 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், “இந்தியாவின் அண்டை நாட்டில் உள்ள மக்கள் இரண்டுவேளை உணவுக்கே வழியின்றி சிரமப்படுகின்றனர். இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் பணம் இல்லாத பாகிஸ்தானில் வாழ விரும்பவில்லை. அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக வாழவே விரும்புகின்றனர்” என்று கூறினார்.

The post பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவில் வாழ விரும்புகின்றனர்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: