குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் 65-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவில்: ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிற்கான கலங்கரை விளக்கம் ஆக இருப்பதுடன், நம்முடைய மக்களின் நலன்களுக்காக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். தேசத்தின் வளர்ச்சியை இன்னும் மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் பாராட்டப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஓர் உந்துதலாக இருக்கும். அவருடைய உடல்நலம் மற்றும் ஒரு நீண்ட வாழ்வுக்காக வாழ்த்துகிறேன் என கூறபட்டுள்ளது.

அவரை தொடர்ந்து, குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வரின் டிவிட்டர் பதில்; இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜனாதிபதி நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்று பொது வாழ்க்கைக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

The post குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: