அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் குரூப் பாடப்பிரிவுகளை துவக்கி நடத்த கோரிக்கை

 

உடுமலை, ஜூன் 19: உடுமலை தாலுகா தேவனூர்புதூர் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமுத்துகவுண்டர் பழனியம்மாள் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் முதல் குரூப் பாடப் பிரிவுகள் (இயற்பியல், வேதியல், கணிதவியல், உயிரியல்) தமிழ் வழியிலும், (இயற்பியல், வேதியல், கணிணி அறிவியல், கணிதவியல்) ஆங்கில வழியிலும் துவக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் பள்ளி திறக்கப்பட்டும் பாடப்பிரிவுகைள துவக்கி நடத்தவில்லை என தெரிகிறது.

எனவே முதல் குரூப் பாட நடத்துவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்தள்ளது.உடுமலையின் மேற்குபகுதி சுற்றுவட்டாரத்தில் வேறுபள்ளிகள் இல்லாத நிலையில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கவும், ஏழை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பாடப்பிரிவுகளை துவக்கி நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உடுமலை ஒன்றிய கமிட்டிகள் சார்பில் முதல்வர் தனிப்பிரிவு, உயர்கல்விச் செயலாளர், திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் குரூப் பாடப்பிரிவுகளை துவக்கி நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: