தங்க தகடுக்கு பதில் பித்தளை கேதார்நாத் கோயிலில் ரூ.125 கோடி மோசடி: மூத்த பூசாரி குற்றச்சாட்டு

டேராடூன்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலின் மூத்த பூசாரியும், தீர்த்த புரோகித் மகாபஞ்சாயத்தின் துணைத் தலைவருமான சந்தோஷ் திரிவேதி ஆன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கேதார்நாத் கோயில் கருவறைக்குள் தங்க தகடு பதிப்பதாக கூறி பித்தளை தகடு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.125 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானது. இந்நிலையில், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி நேற்று விளக்கம் அளித்துள்ளது. கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் அளித்த பேட்டியில், ‘‘கோயில் கருவறை சுவரில் தங்க முலாம் பூசிய தகடுகளை நன்கொடையாக அமைப்பதாக மகாராஷ்டிராவை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பக்தர் கேட்டுக் கொண்டார். அதன்பேரில், செப்பு தகடுகள் மீது அந்த பக்தரே தங்க முலாம் பூசி நன்கொடையாக வழங்கினார். இதற்கு கமிட்டி சார்பில் முறைப்படி அனுமதி தரப்பட்டது. இதில் எந்த ஊழலும் நடக்கவில்லை’’ என கூறி உள்ளார்.

The post தங்க தகடுக்கு பதில் பித்தளை கேதார்நாத் கோயிலில் ரூ.125 கோடி மோசடி: மூத்த பூசாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: