பெருங்களூர் முதல்நிலை ஊராட்சி பகுதியில் கண் திருஷ்டி பொம்மைகள் விற்பனைக்கு தயார்

கந்தர்வகோட்டை: பெருங்களூர் முதல்நிலை ஊராட்சி பகுதியில் கண் திருஷ்டி பொம்மைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பெருங்களூர் முதல் நிலை ஊராட்சியில் உள்ள சில குடும்பங்கள் மண்பாண்டங்கள் செய்தும், மண்ணாலான தெய்வ உருவ சிலைகளும், மாடுகள் சிலையும், சப்த கன்னிகள் சிலையும், கண் திருஷ்டி பொம்மைகள் செய்து வர்ணம் பூசி விற்பனை செய்து வருகிறனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, விவசாயிகள் இறைவனிடம் வேண்டிக் கொண்ட உருவ சிற்பமும், உடல் சிற்பமும் செய்து கொடுப்பதாகவும் அவைகளை காட்டு கோயில்களில் வைத்து வழிபாடு செய்து வந்தால் உடல் நிலை பூரண குணமடையும் என்ற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் உள்ளது என்றனர். அழகிய அகல் விளக்குகளும், பஞ்சமுக விளக்குகளும், அன்ன விளக்குகளும் செய்து வியாபாரம் செய்து வருகிறானர். கண் திருஷ்டி பொம்மைகள் 150 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் பெரிய அளவிலான கண் திருஷ்டி பொம்மைகளை வாகனங்களில் செல்லுபவர்கள் வாங்கிய சொல்கின்றனர்.

மண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பு சலுகை வழங்க வேண்டும். தொழிலாளர் வாரிய அடையாள அட்டை வழங்கி அரசு சலுகைகள் கிடைக்க கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழிமுறை செய்து தர வேண்டும். எங்களால் மாவட்ட தலைநகருக்கு செல்ல முடியவில்லை. எனவே பொதுமக்கள், தொழிலாளர்கள் நலனில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உதவ வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறனர். கிராமபுற தொழிலாளர்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர் என தெரிய வருகிறது.

The post பெருங்களூர் முதல்நிலை ஊராட்சி பகுதியில் கண் திருஷ்டி பொம்மைகள் விற்பனைக்கு தயார் appeared first on Dinakaran.

Related Stories: