முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணி

பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூரில் முதியோர் கொடுஞ் செயல் எதிர்ப்பு தின பேரணியை மாவட்டகலெக்டர் கற்பகம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் முதியோர் கொ டுஞ்செயல் எதிர்ப்பு தினத் தை முன்னிட்டு விழிப்புண ர்வு பேரணியை மாவட்டக் கலெக்டர் கற்பகம் கொடிய சைத்து துவக்கிவைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் தேதி முதியோர்களுக் கு எதிரான குடும்பங்களி லும், சமூகத்திலும் மூத்த குடிமக்களை உதாசினப்ப டுத்தப்படுவதையும் அவம திப்பதையும் தடுப்பதற்கா ன விழிப்புணர்வு ஏற்படுத் திட முதியோர் கொடுஞ்செ யல் எதிர்ப்பு தினம் கொண் டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெரம்ப லூர் பாலக்கரை பகுதியில், தந்தை ரோவர் மேல்நிலை ப் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவ,மாணவிகள் பங் குபெற்ற பேரணியை மாவ ட்ட கலெக்டர் கொடியசைத் துத் தொடங்கி வைத்தார். மாணவ,மாணவிகள் தங்க ளது கைகளில் ஊதா நிற ரிப்பன் கட்டியும், விழிப்பு ணர்வு வாசகம் பொறிக் கப்பட்ட அட்டைகளைக் கை களில் ஏந்தியவாறும் பேர ணியில் கலந்து கொண்ட னர். இந்த விழிப்புணர்வு. பேரணி பாலக்கரை பகுதி யில் ஆரம்பித்து தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்துடன் நிறைவு பெ ற்றது.

பேரணியின்போது போக்கு வரத்து துறை காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவல் து றை அதிகாரிகள் பாதுகாப் புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னி ட்டு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் வாசிக்க அனைத்து துறை அலுவலர் களும் ஏற்றுகொண்டனர். இதில் மாவட்ட சமூகநல அலுவலர் ரவி பாலா, மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் மணிவ ண்ணன், பெரம்பலூர் தா சில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் சமூக நல விரிவாக் கநலஅலுவலர்கள், ரோவர் தலைமை நிலைய அலுவ லர்கள், ஆசிரியர்கள், மக ளிர் ஊர் நலஅலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர், ஒரு ங்கி ணைந்த சேவைமைய பணியாளர்கள் பலர் கலந் து கொண்டனர்.

The post முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணி appeared first on Dinakaran.

Related Stories: