பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்கு தீர்மானம்

திருவள்ளூர்: பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.19 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு பெருந்தலைவர் வெங்கட்ரமணா தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், மணிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜி, பேபி, பிரசாந்தி, காயத்ரி, தேன்மொழி, மணி, பாலாஜி, சண்முகம், யதோதா, ஞானமுத்து, வெங்கடேசன், பிரபாவதி, சுபாஷினி, சுலோட்சனா, ரெஜீலா, மஞ்சு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கைவண்டூர் ஊராட்சி அம்பேத்கர் காலனி, திருப்பாச்சூர் ஊராட்சி, பட்டரைப் பெரும்புதூர் ஊராட்சியில் வன்னியர் தெரு, வரதாபுரம் கிராமம், பென்னாலூர்பேட்டை ஊராட்சி, அம்மம்பாக்கம் ஊராட்சி, வெள்ளாத்துகோட்டை ஊராட்சியில் வெள்ளாத்துக்கோட்டை காலனி மற்றும் கோவில் தெரு, நெமிலியகரம் ஊராட்சியில் கீழ் விளாகம் கிராமம், கச்சூர் கிராமத்தில் முத்தையர் தெரு போன்ற இடங்களில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் என 9 பணிகளுக்கு ரூ.18,89,545-ஐ ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் வெங்கட்ரமணா, ஒவ்வொரு ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

The post பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: