அனுமதி பெறாமல் தேக்கு மரங்களை வெட்டிய தந்தை, மகன்: திருத்தணி கோட்டாட்சியரிடம் புகார்

பள்ளிப்பட்டு; அனுமதி பெறாமல் தேக்குமரங்களை வெட்டிய தந்தை, மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருத்தணி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். பள்ளிப்பட்டு அடுத்த நொச்சிலி அருகே உள்ள திகுவமிட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு மற்றும் அவரது மகன் பாஸ்கர் ஆகியோரின் பெயரில் உள்ள விவசாய நிலத்தில் தேக்கு மரங்கள் வளர்ந்துள்ளன. அவர்களது நிலத்தின் அருகில் நீர்வரத்து கால்வாய் கரைப்பகுதியில் உள்ள தேக்கு மரங்களை வனத்துறை மற்றும் வருவாய்த் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் பாபு மற்றும் பாஸ்கர் இருவரும் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராமமக்கள் கொடுத்த புகாரின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் கிராமமக்கள் சார்பில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபாவை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டது. அம்மனுவில், பாபு மற்றும் அவரது பாஸ்கர் ஆகியோர் தங்களது விவசாய நிலத்தில் வைக்கப்பட்டுள்ள தேக்கு மரங்களை வெட்டாமல், அருகில் நீர்வரத்து கால்வாய் கரைப்பகுதியில் இருந்த தேக்கு மரங்களை அனுமதியின்றி இரவோடு இரவாக வெட்டி விற்பனை செய்ய முயன்றுள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

The post அனுமதி பெறாமல் தேக்கு மரங்களை வெட்டிய தந்தை, மகன்: திருத்தணி கோட்டாட்சியரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: