மும்பை – புனே விரைவுச்சாலையில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்து: விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மும்பை: மும்பை – புனே விரைவுச்சாலையில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். புனே மும்பை விரைவு சாலையில் கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் ரசாயன டேங்கர் கவிழ்ந்து அதற்கு பிறகு டேங்கர் லாரி தீப்பிடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

ரசாயனம் கலந்த லாரி கவிழ்ந்ததில் பாலத்தின் கீழே தீ பரவத் தொடங்கியிருக்கிறது. சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்திருக்கிறார்கள், மாற்றும் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த தீயினை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பாலத்தின் கீழே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் மீது அதன் தீயானது விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மற்றும் அந்த குடும்பத்தினரும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது போக்குவரத்தை சரி செய்யும் பணியும் மற்றும் அதேபோல் தீயை முடிந்தளவு கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்று வருகின்றது. 90 சதவீதம் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரத்தில் முழுமையாக தீ அணைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மும்பை – புனே விரைவுச்சாலையில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்து: விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: