எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு!

கர்நாடகா: கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகார் அளித்திருந்த பெண் இன்று உயிரிழந்தார்.கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது, சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர், மோசடி வழக்குத் தொடர்பாக உதவி கேட்க சந்தித்தபோது அவர் தனது 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் இந்தப் புகாரை மறுத்த எடியூரப்பா, “மக்களவை தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், தற்போது தன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தான், ஆறுதல் கூறி அனுப்பியதை, தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு வெளியிட்டு பொய் புகார் கொடுத்துள்ளனர்” என எடியூரப்பா விளக்கம் அளித்திருந்தார்.இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், புகாரளித்த பெண் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த பெண், சமீபத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துபோனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: