கண்ணம்பாளையம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி

 

சூலூர்,ஜூன்13: கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்று 2ம் ஆண்டு துவக்க விழாவாக கண்ணம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,மரக்கன்று நடுதல்,பொது இடங்களில் சுத்தம் செய்தல்,சுவர்களில் ஓவியம் வரைதல்,தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை பிரித்து வழங்கும் பொதுமக்களை பாராட்டி பரிசு வழங்குதல், குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பேரணி, வள மீட்பு பூங்காவில் சேகரம் செய்யும் குப்பைகளை உரமாக்குவது குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், செயல் அலுவலர்,மன்ற உறுப்பினர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கண்ணம்பாளையம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி appeared first on Dinakaran.

Related Stories: