மாமல்லபுரத்தில் நாளை ஜி20 மாநாடு தொடக்கம்: பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள ரேடிசன் புளூ தனியார் ரிசார்ட்டில் நாளை14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஜி20 மாநாட்டின், முதல் கல்விக்குழுவின் கருத்தரங்கம் கடந்த டிசம்பர் 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 2ம் தேதி என இரண்டு நாட்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்தது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. அதன், ஒரு பகுதியாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரேடிசன் புளூ தனியார் ரிசார்ட்டில் நாளை (14ம் தேதி) தொடங்கி 15, 16 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், 3வது நிலையான நிதிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த, மாநாட்டில் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

The post மாமல்லபுரத்தில் நாளை ஜி20 மாநாடு தொடக்கம்: பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: