தனியார் ஊழியர் மாயம்

 

தில்லைநகர், ஜூன் 11: திருச்சி உறையூரில் தனியார் ஐடி நிறுவன ஊழியர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் தேவர் காலனி வசந்த் விகார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயக்கொடி (32). இவருடைய கணவர் சுப்பிரமணியன் (38). இவர் திருச்சி கே கே நகரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 7ம்தேதி இரவு 8 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்பிரமணியன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த அவரது மனைவி ஜெயக்கொடி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர்ட ராஜா வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

The post தனியார் ஊழியர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: