திருவாரூரில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

 

திருவாரூர், ஜூன் 11: சர் .ஏ .டி பன்னீர்செல்வம் 135 வது பிறந்த நாளையொட்டி திருவாரூரில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினார். நீதி கட்சி தலைவர்களில் ஒருவரான சர். ஏ. டி பன்னீர்செல்வத்தின் 135 வது பிறந்தநாள் விழா அவரது சொந்த ஊரான செல்வபுரம் கிராமத்தில் இருந்து வரும் பேராலயத்தில் நேற்று மார்ட்டின் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் உலகநாதன், பண்ணை வளாகம் பேராலய பங்கு தந்தை அந்தோணி ராஜ். வழக்கறிஞர் ஆண்டனி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசிய நிலையில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு சர் .ஏ. டி பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஊன்று கோல் மற்றும் பள்ளிகளுக்கான மேஜை, நாற்காலி ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், ஊராட்சி மன்ற தலைவர் வேலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: