சீர்காழியில் தூய்மை இந்தியா திட்டத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்

 

சீர்காழி,ஜூன் 11: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூய்மை நகருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமையில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் நீர்நிலைகளை தூய்மை செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்ட கூடாது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் ஆகிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.. இதில் நகராட்சி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் தூய்மை இந்தியா திட்டத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: