சிவகாசி அருகே தண்ணீர் கேட்பதுபோல் நடித்து 3 பவுன் செயின் திருட்டு: வாலிபருக்கு வலை

 

சிவகாசி, ஜூன் 11: சிவகாசி அருகே தண்ணீர் கேட்பதுபோல் நடித்து வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் செயினை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே நேருகாலனி டீச்சர் காம்பவுன்ட் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஜோதி (38). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், உங்களது உறவினர்களை எனக்கு நன்கு தெரியும். தாகமாக இருக்கிறது கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இதையடுத்து ஜோதி, இருங்கள் குளிர்பானம் வாங்கி வருகிறேன் என்று அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். கடையில் குளிர்பானம் வாங்கிவிட்டு வந்து பார்த்த போது, அந்த வாலிபரை காணவில்லை. வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது, 3 பவுன் தங்க செயினை காணவில்லை. தண்ணீர் கேட்பதுபோல் நடித்து செயினை வாலிபர் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சிவகாசி அருகே தண்ணீர் கேட்பதுபோல் நடித்து 3 பவுன் செயின் திருட்டு: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: