கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

திருவில்லிபுத்தூர், ஜூன் 11: திருவில்லிபுத்தூர் அருகே, ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் திலீபன்ராஜா தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் புலவர் செ.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிவசங்கரி குழுவினர் வரவேற்பு நடனமாடினர். டி.எஸ்.பி சபரிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு நிர்வாக அதிகாரி புலவர் செ.பாலகிருஷ்ணன் ரூ.ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பிலும், வணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரி முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பிலும், பிற பாடங்களில் முதலிடம் பெற்றவர்களுக்கும், கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கல்லூரி செயலர் நினைவுப் பரிசு வழங்கினார். பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.

The post கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: