தமிழகத்துக்கு செய்ததை அமித்ஷா பட்டியலிட முடியுமா?.. சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்..!

சேலம்: தமிழகத்துக்கு செய்ததை அமித்ஷா பட்டியலிட முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்; செப்.15 அண்ணா பிறந்த நாள் முதல் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு கொண்டாட உள்ளோம். எனது வாழ்வில் மறக்க முடியாத ஊர் சேலம். திராவிட இயக்கம் உருவாகிய மண் சேலம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக சேலம் கூட்டம். நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உரக்கச் சொல்லவே சேலம் வந்துள்ளேன்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தோல்வியை சந்தித்து வரும் கட்சிதான் அதிமுக. கொத்தடிமை கூட்டமான அதிமுகவை நம்பி தேர்தலுக்கு வந்திருக்கிறது பாஜக. காட்டாற்று வெள்ளத்தில் வந்த கரடியை பிடித்தவன் ஒருவன் அதனை விட நினைத்தான். அவனை பிடித்துக்கொண்டது கரடி. வெள்ளத்தில் வந்த கரடியை பிடித்தவனை கரடி பிடித்துக்கொண்ட கதைதான் அதிமுக-பாஜக கூட்டணி. சசிகலாவின் காலை வாரிவிட்டு, பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். தேர்தல்களில் தோல்வி மேல் தோல்வி கண்ட கட்சி அதிமுக. பாஜகவின் செல்வாக்கு நாடு முழுவதும் சரிந்து வருகிறது.

பாஜகவின் 9 வருட சாதனைகளை கூற அமித்ஷா தயாராக உள்ளாரா?. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டித்தான் அமித்ஷா சென்னைக்கு வருகிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என அமித்ஷா பட்டியலிட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்து 8 வருடம் ஆகிறது, தமிழகத்திற்கு ரூ.1000 கோடி செலவிட மனம் இல்லாத அரசாக உள்ளது. மாநிலத்திற்கான நிதியை கொடுக்க பாஜக அரசு மறுக்கிறது. மாநில வளர்ச்சி நிதி, பேரிடர் கால நிதியை கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க பாஜக அரசு மறுக்கிறது. திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி உள்ளோம்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லோரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சியை வீழ்த்தவே முடியாது என்ற ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். யார் வந்தாலும் திமுகவும், மு.க.ஸ்டாலினும் அஞ்ச மாட்டோம். தேசிய அளவில் திராவிட மாடல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து வென்று காட்டுவோம். காலத்தின் சூழல் மாறிவிட்டது; சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். திமுக ஆட்சி தொடர்பாக பொய்யாக பரப்பப்படும் தகவல்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

The post தமிழகத்துக்கு செய்ததை அமித்ஷா பட்டியலிட முடியுமா?.. சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்..! appeared first on Dinakaran.

Related Stories: