சென்னை அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதற்கு திமுக முடிவெடுத்து கொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.20 கோடி செலவில் கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post சென்னை அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: