கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கட்சியின் செயல்பாடுகள் கொள்கைகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இவற்றை கொண்டு செல்லும் நோக்குடன், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்காக தனித்தனியே இணையதள பக்கங்கள் முகநூல், ட்விட்டர் என அனைத்திலும் கணக்குகள் துவங்கி கட்சிகளின் நிகழ்வுகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட //DMK.in கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.

The post கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: