இது தான் சரியான நேரம் தங்கம் வாங்க..! ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,590க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் உயர்ந்து ரூ.79.80க்கு விற்பனை ஆகிறது. தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். உலகம் முழுவதும் நிலையான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் கடந்த ஆண்டுகளில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. பங்ச்சந்தை நிலை பெறும்போது தங்கத்தின் மதிப்பு சற்று குறையும்.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.5,590க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.44,720 ஆகும். சென்னையில் ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.79.80க்கு விற்கப் படுகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,800-க்கும், கிராமிற்கு 35 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.79.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post இது தான் சரியான நேரம் தங்கம் வாங்க..! ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: