தர்மபுரி அரசு கலை கல்லூரியில் 3ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு

தர்மபுரி, ஜூன் 10: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வரும் 14ம்தேதி 3ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 2023-2024ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை நடந்து வருகிறது அந்த வகையில் 3ம் சுற்று மாணவர் சேர்க்கையானது, வரும் 14ம் தேதி நடக்கிறது. தரவரிசைப்படி அழைக்கப்பட்ட அனைவரும், அட்டவணைப்படி கலந்து கொள்ளலாம். வரும் 14ம்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளி மாணவர்கள், அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. அதன்பின், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, புள்ளியியல், மின்னணுவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

வரும் 15ம் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு, வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. வரும் 16ம்தேதி தமிழ், ஆங்கிலம், காட்சிவழித் தொடர்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப்பணி, உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சேர்க்ககை்கான கலந்தாய்வு நடக்கிறது. சேர்க்கையின் போது மாணவர்கள் 6 ஆவணங்களின் 3 நகல்கள் கொண்டுவர வேண்டும். விண்ணப்பப்படிவம், அசல் மாற்றுச்சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தர்மபுரி அரசு கலை கல்லூரியில் 3ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: