க.பரமத்தி அருகே குளத்தூர்பட்டியில் பள்ளி செல்லா குழந்தைகள் 4பேர் பள்ளியில் சேர்ப்பு

 

க.பரமத்தி, ஜூன்10: க.பரமத்தி அருகேயுள்ள குளத்தூர்பட்டியில் பள்ளி செல்லாத குழந்தைகள் 4பேரை பள்ளியில் சேர்க்கப்பட்டனர். க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் 30ஊராட்சிகள் உள்ளன. தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பவித்திரம் ஊராட்சி குளத்தூர்பட்டி பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பீகார் மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் நான்கு மாணவ மாணவர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

பிறகு மேற்கண்ட இந்த குழந்தைகளது பெற்றோரை நேரில் சந்தித்து குழந்தைகளது எதிர்காலம் குறித்து விரிவாக பெற்றோரிடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அறிவழகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் முரசொலி, ரேவதி மற்றும் சரண்யா பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார், உதவி ஆசிரியர் சத்யா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி திவ்யா, ஆகியோர் விரிவாக எடுத்து கூறினர்.

இதனையடுத்து தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மாணவர்களது பெற்றோர்கள் சம்மதித்தனர். உடனே அருகேயுள்ள குளத்தூர்பட்டிதொடக்கப்பள்ளியில் 4மாணவர்களை சேர்க்கப்பட்டு கோடை விடுமுறைக்கு பின் பள்ளி வரும் போது புத்தகம் நோட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.இது பரமத்தி வட்டார பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

The post க.பரமத்தி அருகே குளத்தூர்பட்டியில் பள்ளி செல்லா குழந்தைகள் 4பேர் பள்ளியில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: