கரூர் அருகே சணப்பிரட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா மரக்கன்றுகள் நடும் திட்டம்

 

கரூர், ஜூன்10: கரூர் மாவட்டம் பழைய நாகப்பட்டினம்-கூடலூர் மைசூர் சாலையின் சணப்பிரட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பாக கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா தமிழக முதல்வரால் சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் துவங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பாக, பழைய நாகப்பட்டினம்-கூடலூர் மைசூர் சாலையில் சணப்பிரட்டி அருகே துவக்கி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் முழுவதும் 12,500 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர்கள் கர்ணன், பார்த்தசாரதி உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

The post கரூர் அருகே சணப்பிரட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா மரக்கன்றுகள் நடும் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: