மாநகராட்சியில் வரும் 13ல் குடிநீர் வினியோகம் நிறுத்தம் கமிஷனர் தகவல்

 

திருப்பூர், ஜூன் 10: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி குடிநீர் பிரிவில் 3வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் வருகிற 12ம் தேதி மாநகராட்சி பகுதியில் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12ம் தேதி ஒரு நாள் மட்டும் 3வது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும். எனவே, திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் 13ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. 14ம் தேதி முதல் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாநகராட்சியில் வரும் 13ல் குடிநீர் வினியோகம் நிறுத்தம் கமிஷனர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: