புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கத்தை நியமித்து காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே உத்தரவு!

டெல்லி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கத்தை நியமித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அண்மையில் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களுக்கு மாநிலத் தலைவர்களை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்துக்கு சக்திசிங் கோகிலும், மும்பைக்கு வர்ஷா கெய்க்வாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா பொறுப்பாளராக பிசி விஷ்ணு ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டெல்லி மற்றும் அரியானா பொறுப்பாளராக தீபக் பாபாரியா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயலாளராக மன்சுர் அலிகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கத்தை நியமித்து காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: